மனமே மந்திரசாவி அசைந்திடும் காற்றாய் அளவில்லா உற்றாய் அத்தனைக்கும்...
மனமே மந்திரசாவி
அசைந்திடும் காற்றாய்
அளவில்லா உற்றாய்
அத்தனைக்கும் ஆசைப்படும்
அடங்காத மனமே!
மனதினை ஆள்பவன்
மனங்களில் வாழ்கிறான்
மனதிற்கு அடங்கியவன்
மண்ணோடு வழ்கிறான்!
விழ்வதும் எமுவதும்
மனதின் வலிமையால்
புனிதனும் புத்தனும்
மனதின் துய்மையால்!
மண்ணை வென்றவெரல்லாம்
மன்னராகலாம் பூமியில்
மனங்களை வென்றவரே
மனிதருள் மாமனிதர்!
