எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                      மனமே மந்திரசாவி 


 அசைந்திடும்       காற்றாய் 
 அளவில்லா        உற்றாய் 
 அத்தனைக்கும்     ஆசைப்படும் 
 அடங்காத         மனமே!   

 மனதினை         ஆள்பவன் 
 மனங்களில்        வாழ்கிறான் 
 மனதிற்கு          அடங்கியவன் 
 மண்ணோடு        வழ்கிறான்!      
                  
 விழ்வதும்              எமுவதும் 
 மனதின்           வலிமையால் 
 புனிதனும்              புத்தனும் 
 மனதின்           துய்மையால்!   

 மண்ணை             வென்றவெரல்லாம்
 மன்னராகலாம்     பூமியில் 
 மனங்களை        வென்றவரே 
 மனிதருள்              மாமனிதர்! 
பா.விஜய்      

மேலும்

                      மனமே மந்திரசாவி 

 அசைந்திடும்       காற்றாய் 
 அளவில்லா        உற்றாய் 
 அத்தனைக்கும்     ஆசைப்படும் 
 அடங்காத         மனமே!   
 மனதினை         ஆள்பவன் 
 மனங்களில்        வாழ்கிறான் 
 மனதிற்கு          அடங்கியவன் 
 மண்ணோடு        வழ்கிறான்!                        
 விழ்வதும்              எமுவதும் 
 மனதின்           வலிமையால் 
 புனிதனும்             புத்தனும் 
 மனதின்           துய்மையால்!   
 மண்ணை             வென்றவெரல்லாம்
மன்னராகலாம்     பூமியில் 
மனங்களை        வென்றவரே  
மனிதருள்              மாமனிதர்! 
பா.விஜய்      

மேலும்

   அசையாத நீர்ப்பொழிலில் ஆகாயம் ஓவியம் 

  அலையிலாடும் நீர்ப்பொழில்    நீரோவியம்   
  அலைபாயும் மனம் சலன ஓவியம்  
   அசையாத மனம் ஆனந்தோவியம் !    

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சிவா 22-Jan-2019 4:16 pm
கவிதை அழகான ஓவியம் 20-Jan-2019 1:36 pm
ஆம் மிக அழகாக புரிந்து சொன்னீர்கள் மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் ASK 18-Jan-2019 3:23 pm
அழகான சிந்தனை , ஞானக் கருத்து... சலன ஓவியம் புதிய சொல்லாட்சி .. அதை மனதைக் குறிக்கும் போது பொருந்திப் போகின்றது .... 18-Jan-2019 3:10 pm


தடை


ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன் குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,

''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..

குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

மேலும்

சில நேரங்களில் 

கண்ணை காக்கும் இமையின் முடி தான் அதிகம் உறுத்துகின்றன ..................  

மேலும்

தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்..... கருத்திற்கும் நன்றி நட்பே.... 27-Mar-2018 7:38 pm
ஒரு வரிக்கவிதை தான். துளிப்பா என்போம். ஆனால் அதின் உட்பொருளை உள்வாங்குகையில் வியக்கின்றேன். கண்ணைக் காக்கும் இமையின் முடி தான் அதிகம் உறுத்துகின்றன.. உண்மை.. நம் நெருங்கிய உறவுகளாலே நாம் சமயங்களில் அதிக காயப்படுகிறோம். ஆக்கம் அருமை நண்பரே. 27-Mar-2018 7:01 pm
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்..... கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே.. 27-Mar-2018 6:34 pm
அழகு ..சிறப்பு ..வாழ்த்துக்கள் 27-Mar-2018 3:48 pm

உள்ளம் 

     
பள்ளத்தில் ஓடும் நதிகள் 
கரைபுரண்டு ஓடாதவரை நன்மையே! 

மேலும்

தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா..... 16-Jan-2018 1:01 pm
கரை புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுதல் அதனினும் நன்றே ! ---க சா 16-Jan-2018 11:18 am

மனம்:
யோகா ஆன்மீக பயிற்சி ஆகியவற்றின் அடிப்படைத் தத்துவமே மனதைக்கட்டுபடுத்துவதே அது ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதில்லாமல் வாழ்க்கையிலும் முன்னேறி வெற்றி பெற மிக முக்கியமானதாகும்.மனதைக்கட்டுப்பட்டுத்தினால் இன்பமும் துன்பமும் தானாக நமக்கு கிட்டும்.

மேலும்


மேலே