எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வானவில் கண்ணழகு வண்ணம் எல்லாம், வான்வெளியின் புறவெளியில், மின்மினியாய்...


வானவில்

கண்ணழகு வண்ணம் எல்லாம்,

வான்வெளியின் புறவெளியில்,

மின்மினியாய் மின்னும் மாயம்.



எழில் மழைத் தூறலை,

முகில் தன் மடியேந்தி,

வானில் வாசல் தெளித்து,

விண்ணில் போட்ட கோலம். இது

தூணே இல்லாத பாலம்.



காரணம் கேட்டேன், இந்த

கண்ணழகு வளைவுக்கு.

வசந்தத்தின் வரவுக்கு

வானம் போட்ட வண்ண

வண்ணத் தோரணமாம்.

அந்த சூல் கொண்ட

மேகத்துக்கு,

அந்தரத்தில் இன்று

வளைகாப்பாம்.



வான் கோக்கிற வண்ணத்தை

நான் நோக்கும் எண்ணத்தால்

விண் நோக்கிப் பார்த்தேன்

கண் இரண்டும் போதவில்லை

உன் கண் இரண்டைத் தருவாயா?



ச.தீத்தாரப்பன்

நங்கநல்லூர்

94435 51706.





















பதிவு : Deepan
நாள் : 6-Jul-20, 3:11 pm

மேலே