எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொய்யாக வாழ்த்துரைத்து மொய்யாக விருது வென்றிட மாட்டேன். அவ்வாறு...

பொய்யாக வாழ்த்துரைத்து
மொய்யாக விருது
வென்றிட மாட்டேன்.
அவ்வாறு நான் வென்றிட்டால்
அந்த நிமிடமே நான் பிணம்...!


வாழ்த்துரைக்கு மயங்கி
வெற்றிகிண்ணம் எனக்கு தந்திட
என் ஆசானும்
பரிந்துரைப்பது இல்லை.
எந்த அதிபரும்
மயங்கி விடுவதில்லை.
இங்கே எவரும்
உன்னை போல
தரங்கெட்டவரில்லை.

பொறாமை போதையில்
இயலாமை ஒன்று
வெறியாட்டம் போட்டால் என்
வெற்றியாட்டம் தடையாகுமோ....?

என்னை விட
என் சிநேகிதிக்கு
என் வெற்றி மீது
அதீத அக்கறை...!

கொடுத்தவைத்தவன் நான்..!

சிநேகிதியின்
அநேக கவிதையில்
கவிநாயகன் நான்..!
வாரத்திற்கு ஒரு முறை
என்னிடமிருந்தே
கரு ஒன்று எடுத்து
எனக்கே எழுதிடும்
தீவிர என் அபிமானி..!


படைப்புக்கள் எழுதிட
எனக்கு
ஆயிரமாயிரம்
சிந்தனைகள் இருக்கு,,,!

உனக்கு..?

நல்லவரின் சேவையை பாராட்டு...
இல்லையேல்
அம்மாடி கொஞ்சம் ஓரங்கட்டு..!


--யாரோக்கோ எழுதிய படைப்பு..!

நாள் : 29-Apr-14, 9:14 am

மேலே