எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வீர வணக்கம் ! பாட்டுடைத் தலைவன் படைவீரன் -...

வீர வணக்கம் !
பாட்டுடைத் தலைவன் படைவீரன் -
==============================

வீரத் திலகமிட்டு வெற்றிவாகை சூடிவர
போர்க்குடியில் பிறந்தவனே !
போய்வருவாய் போர்க்களமே !

தாய் தந்தை காத்தவனே !
தாயகத்தை காத்திடுவாய் !
பாசம் மிகுந்தோனே!
தேசம் தனை காத்திடுவாய் !

உறங்காது கண்விழித்து
உயிரைத்தான் பணயம் வைத்து
பாரதம் காத்திடவே
புறப்பட்டாய் போர்க்களமே !

புயலாய் புறப்பட்ட போர்வீரா !
அத்துமீறும் அந்நியரை
ஆழிப்பேரலையாய்!
அழித்திடவே ஆர்பரிப்பாய் !

வீரத்தில் விளைந்தவனே !
வினையம் கொண்டோனை
வெட்டியே வீழ்த்திடுவாய்!

கட்டுடல் காளையனே !
கார்மேக மேனியனே !
காட்டாறாய் களமிறங்கி
கயவர்களை களைந்திடுவாய் !

எரிமலையாய் நீ எழுந்து
ஏவுகணை தான் சுமந்து
எல்லை தாண்டும் எதிரிகளை!
எரித்தே அழித்திடுவாய் !

பாரதத்தின் படைவீரா !
பதுங்கு குழி தான் பதுங்கி
பாயும் புலியென பாய்ந்து
பகைவரின் தலை கொய்வாய்!

சிந்தையில் சிறந்தோனே !
சிங்கமென சினம் கொண்டு
ஊடுருவும் தீய வாதியை
உருக்குலைய செய்திடுவாய் !

தாயகத்தின் தலைமகனே !
மதவாத வெறியர்களை
வதம் செய்தே வந்திடுவாய் !

எல்லை காக்கும் படைவீரா !
தொல்லை தரும் துரோகிகளை
துணிந்தே சிரம் நீக்கு !

வீரத்தாயின் வித்தகனே !
வியூகம் தான் வகுத்து
வெற்றிவாகை சூடிடுவாய்!

இமைமூடா இறையவனே !
உன் உயிர் விரும்பாது
எங்கள் உயிர் காக்கும் இறையோனே !

உன் புகழ் நிலைத்திடவே
பாட்டுடைத் தலைவனாக்கி
பாடிட்டேன் ஒரு பாட்டு ....


பாடியவர் : அழகர்சாமி சுப்பிரமணியன் (அ.சு )
http://eluthu.com/login/nanbarkal/alagarsamy_subramanian.html

நாள் : 29-Apr-14, 9:55 am

மேலே