ஆசை புல்வெளி நாவலில் காதலாய் கவிதைகள் பாதையாய் வார்த்தையில்...
ஆசை புல்வெளி
நாவலில் காதலாய் கவிதைகள் பாதையாய்
வார்த்தையில் முளைவிடுதே
கதைகள் புவி எழுதே.....
சிலேடை மொழி பேசி செல்ல
திரைக்கதையாய் நாம் நகர்ந்து
புத்தம்புது வடிவம் பிறக்க
பக்கம்போலே நாட்கள் புரண்ட
நீண்டே இன்னும் நகர்ர......
கதைமாந்தர் நீயும் நான்னும்
காட்சிகள் அழியா ஓவியமாகும்
எளிய நடையே நம் உறவாகும்
வருணனை உனக்கான முழுமையாகும்.....
பத்திரு கைவிரல் கதைப்பின்னலாகும்
ஆசை நெகிழ்ச்சி பிம்பமாகும்
செறிவு தளமே முன்னும் பின்னும்
நம் தொடர்புக்கு விதிகளாகும்.....
சுமேரிய காவியமாய் துவக்கம் எழுந்தது
ஒலியின் வடிவம் எழுத்தில் பிறந்தது
உனது வருகை உயிரில் கலந்து
பிறக்கும்போதே முழுமையடைந்தது
வளரவளர புதுமை கொடுக்குது......
ஈன்ற தனிமை இருவரையும் அழைக்குது
மனதின் ஓட்டத்தை மூச்சியில் வைக்குது
முதல் காதலை விளைய நடக்கிறது......
ஆக்சிஜன் நிறைந்த ஆயுள் ரேகைகள்
வாழ்ந்தே நடக்குது நாவல் பூக்கள்
இணைந்த காலம் எடுத்து நகருது நூல்கள்
பாத்திரமாய் நீயும் நான்னும்
புதினமாய் முத்தமிட்டு வரிகள் தொடரும்
பரிசுகளோடு தோள் சாய்ய நீ வேண்டும்
கிழம் வயதில் நாம் இருவரும்
கைகோர்ந்து நடந்து நாவல் முடியவேண்டும்
முழுமையாக காதல் நிறைவேற வேண்டும்....
மில்டன் ரகுமான்