எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தேடலின் அர்த்தம் நீ... 

என் கவிதையின் முதல் வரி நீ... 
என் வாழ்க்கையின் பாதி நீ....
என் விடியலின் வெளிச்சம் 
நீ... 
என் கேள்வியின் விடை நீ... 
என் இதயத்தின் துடிப்பு
நீ.... 
என் வாழ்வின் முதலும் நீ முடிவும் நீ.....

மேலும்

மலர்கள்தான்
மலர்ந்துள்ளனவே...
நீங்கள் ஏன்
ரசிக்கக் கூடாது ?
...
என்னை ரசிக்க வைக்க
அந்த மலர்கள்
மலரவில்லை !

நான் ரசித்து விட்டேன்
என்று
அந்த மலர்கள்
நிலைத்திருக்கப்போவதுமில்லை !

நான் ரசிக்கவில்லையே
என்று
அந்தச் செடிகளும்
பூக்காமல்
இருக்கப்போவதுமில்லை !

மலர்கள்
வெறுமனே
மலர்கின்றன !

-mafaz  

மேலும்

தண்ணீர்!


கட்டுக்கடங்காக் 
காளையாக!
வானில் முட்டி
ஒளியை எய்தி 
மாரியாக! 
கொட்டிப் பொழிந்து 
நீரோடையாக! 
நிலவெங்கும் பார்த்தால்
பயிர்ச் சோலையாக!
மாற்றியமைக்கும்
நீரான உன்னை
காணல் நீராக
மாற்றியமைத்தது
மனித வாழ்க்கை🙃...

மேலும்

                       தண்ணீர்!

கட்டுக்கடங்காக் 
காளையாக!
வானில் முட்டி
ஒளியை எய்தி 
மாரியாக! 
கொட்டிப் பொழிந்து 
நீரோடையாக! 
நிலவெங்கும் பார்த்தால்
பயிர்ச் சோலையாக!
மாற்றியமைக்கும்
நீரான உன்னை
காணல் நீராக
மாற்றியமைத்தது
மனித வாழ்க்கை🙃...

மேலும்

கவிதைக்குள் 🌈

கணிதம்.


பொட்டிட்டு வட்டமிட்டு,

முக்கோணம்  2 இட்டு,

கோபுரங்கள்  சமமாக

வட்டத்திலிருக்க,

தெரிவான் முருகன் .


முருகன் சந்நிதானம்

சுற்றி நீ  வந்தாயானால்

நடந்த தூரமதை கணி வட்டத்தின் ஆரையில்!!


🗝️ 🔑🗝️🔑

பொட்டு:- centre

கோபுரங்கள்:- vertices

முருகன்: -  6 faces/ hexagon


விடை

2×√3×ஆரை

ஆக்கம் 


சண்டியூர் பாலன்.

மேலும்

சூழல் காப்பது சுகம்


பாலைவனமா? சோலை வனமா?

எது சுகம்?


பசும் புல்வெளியா கட்டாந்தரையா

எது சுகம்?


முள்ளும் கல்லுமா? உன்

சுற்றம்?


முகிலும் வனமும் தானே

மகிழ்ச்சியின் முற்றம்!


 கொட்டும் அருவியும்

குளிர் தென்றலும்


வாளை மீனும் வாவியும்

வண்டுகளின் ரீங்காரமும்


ஓங்கிய செந்நெல்லும்

ஓடி விளையாடும் கயல்களும்


தாமரையும் அல்லியும்

தவழும் குளங்களும்


ஆவும் மாவும்

அருந்தும் குள நீரும்


கரும்பும் கதலியும்

காற்றோடு மலர் மணமும்


சில்லென நடக்கும்

சிற்றோடை களும்


ஆற்றங்கரை மேடுகளும்

அங்குள்ள மீன்கொத்திகளும்


ஏரிகளும் மடுவழி பாயும்

மடவை மீன்களும்


நரிகளும் பரிகளும்

நலம் பயக்கும் காடுகளும்


புகையும் பகையும் இலா

தூய்மையான சூழலும்


சூழல் காப்பதே சுகம்தான்

சுற்றம் நலம் எனில் 

நாமும்  நலந்தான்!!


மு குமார்

முதுகலை ஆசிரியர் தாவரவியல்

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

நந்திவரம்.செங்கல்பட்டு மாவட்டம்.


மேலும்

இது நம்ம ஆளு...

by,
உயிரெழுத்துக்கள்

மேலும்

அழகே அழகாய் அ

மேலும்

இது சரியாகத் தோன்றுகிறது...

மேலும்

பெண்... (KANAKALAKSHMI)
25-May-2021 12:16 pm

பெண்

மேலும்

மேலும்...

மேலே