எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புன்னகை கார்த்திகை மாதம் காலையில், இருள் சூழ்ந்த பனி...

                    புன்னகை 

கார்த்திகை மாதம் காலையில்,
இருள் சூழ்ந்த பனி வேளையில், 

கரும்பச்சை நிறம் கொண்ட செடியில், 
தலை குனிந்து நிற்கும் செம்பருத்தி பூ வில்,

காலை கதிர், பூவின் மீது பட்டவுடன்!!!!
மெதுவாக இதழ்களை விரித்து, 

பிரகாசமாய் நிமிர்ந்து நிற்கும்!!! 
"பூவின் இதழ் ஒலி எழுப்பாமல் புன்னகைப்பதைப்  போல் காட்சியளிக்கும்" !!!. 

கண்களை மூடி இந்த காட்சியை கண்டால்,
பூவின் புன்னகை  நம் கண்களுக்கு தெரியும்!!!. 

கண்களுக்கு தெரிந்த புன்னகை நம் முகத்தில் தெரியும்!!!. 
இயற்கையை ரசிக்கும் போது  மனம் மென்மையாகிறது 
மென்மையான மனம் இயற்கையாகவே புன்னகிப்பது தெரியும்!!!.        

நாள் : 2-Oct-20, 6:10 pm

மேலே