எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனக்காக வாழ்வேன் 🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃 உன்னை மறக்க நினைக்கும் போதெல்லாம்...

உனக்காக வாழ்வேன்
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃
உன்னை மறக்க நினைக்கும்
போதெல்லாம் அந்நிமிடம்
கூட நினைவில் வருது நீயே...

அன்பாக பேசினாய் 
அன்னை என உணர்தேன்... 

தவறுகள் செய்தேன் கண்டித்தாய் 
அந்நிமிடம் தந்தையானாய்...

கவலையில் இருந்தேன் 
தோழியாய் தோள் கொடுத்தாய்...

சிரிக்க கற்று கொடுத்து என்னை 
சிதைத்து போனது ஏனோ...

பழக கற்று கொடுத்து பாதியில்
போனது ஏனோ...

உன்னை ஏச மனமில்லை 
உன்னை உயிராய் அல்லவா
நேசித்தேன்... 

உன்னோடு வாழ்ந்தவன் 
இன்று-உன் நினைவோடு வாழ்கிறேன்...!!

🌾மதுபாலா🌾

பதிவு : ஹீ பாலா ஜீ MBA
நாள் : 14-Nov-20, 10:51 pm

மேலே