எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்கள் முகம் பார்த்ததில்லை ஒருநாளும்! உங்கள் குரல் கேட்டதில்லை...

உங்கள் முகம் பார்த்ததில்லை ஒருநாளும்!

 உங்கள் குரல் கேட்டதில்லை ஆனாலும்!

காதல் மட்டும் குறையவில்லை எந்நாளும்..!

நபியே..! 
காதல் மட்டும் குறையவில்லை எந்நாளும்..!


பாலைவனம் சோலையானது உம் வரவால் ...
நபியே உம் வரவால்... 

இந்த ஏழை மனம் ஏங்கித் தவிக்குது உம் பிரிவால்...
நபியே..! உம் பிரிவால்..  


இல்லை என்று சொல்லும் மனம் இருந்ததில்லை ....

தொல்லை தந்த யாரையும் பழித்ததில்லை ...

பாலைவன பௌர்ணமியாய் உங்கள் முகம் ..!

விரோதியும் விரும்பிடுவார் உங்கள் குணம்!


வானின் நிலா தனை வெட்டிக் கொள்ளுமே...
உம் கை அசைந்தால்!

நபியே..!  உம் கையசந்தால்..
 
என் உயிர் நாடியும் தன் துடிப்பை நிறுத்துமே...
 உம் கண் அசைந்தால்!

நபியே..! உம் கண்ணசைந்தால்..

பாவங்களை செய்ய மனம் நினைத்ததில்லை ...!

உதவிட யாருக்கும் மறுத்ததில்லை ..!

அழகெல்லாம் அணிவகுத்து வந்தாலுமே...
அண்ணல் நபி முன்னாலே அசந்திடுமே ...

பதிவு : மல்லி
நாள் : 24-Nov-20, 4:56 pm

மேலே