எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஊரடங்கு என்பது ஊருக்கு மட்டும் என்று இல்லாமல்,நமக்கு என்பதை...

ஊரடங்கு என்பது ஊருக்கு மட்டும் என்று இல்லாமல்,நமக்கு என்பதை உணர்ந்து தேவையின்றி வெளியில் செல்லாமல் ,நம்மையும் பாதுகாத்து நாட்டையும் காப்போம் !அரசுக்கு ஒத்துழைப்பு தந்து , கட்டுப்பாடுகளை மீறாமல் தன்னலம் கருதி , பொது நலத்தையும் கருத்தில் கொண்டு வீட்டில் இருப்போம் . இதனால் சிலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை மறுக்கவில்லை !


ஆனால் அதைவிட முக்கியம் நமது உயிரை பாதுகாத்துக் கொள்வது அனைவரின் கடமை . கொரோனா எனும் உயிர் கொல்லி பரவலை தடுத்து , நாமே நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து செயல்படுதல் மிக அவசியம் !

ஊடங்களில் வரும் செய்திகளும் காட்சிகளும் நமது நெஞ்சை உறைய வைக்கிறது . இன்று பல குடும்பங்கள் தமது சொந்த பந்தங்களை இழந்து தவிப்பதும் , அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி இருப்பதையும் நினைக்கும் போது உள்ளம் பதைக்கிறது . சுய கட்டுப்பாடு என்பது தற்போதைய தேவை . 

நமது நலனோடு மற்றவர் நலமும் மிக முக்கியம் . நன்றி, வணக்கம் !


பழனி குமார்   

நாள் : 25-May-21, 10:33 am

மேலே