விடாதே விடாதே முயற்சியை. நீ முயன்றிடு ஓயாதே ஓயாதே...
விடாதே விடாதே முயற்சியை.
நீ முயன்றிடு
ஓயாதே ஓயாதே முட்டிமோதியே
நீ பிழைத்திடு
தவறெதுவோ சரியெதுவோ அறிந்திடு
தவறெதுவோ அதை சரியாக்கிடு
உன்னால் முடியவே முடியாது
என்று சொல்லிடும் முட்டாளிடம் சவாலிடு
அல்லும் பகலும் அயறாது உழைத்திடு
நீ வாழும் காலங்கள்
அதை எல்லாம்
புது வரலாறு ஆக்கிடு
கடல் தாண்டி கடந்திடு
விண் தாண்டி பறந்திடு
இமயம் என்ன உயரம் அதையும் கையுக்குள்
அடக்கி காட்டிடு
வாடா வாடா வானம் என்ன நீளம்
அதையும் அளந்து பார்த்திடு...
பரத்