*பெற்றோர் தின கவிதை* உருகினாலும் வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திகள்......
*பெற்றோர் தின கவிதை*
உருகினாலும்
வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திகள்...
புகைந்தாலும்
மணத்தைக் கொடுக்கும் ஊதுபத்திகள்......
வாடினாலும்
வாசத்தை
கொடுக்கும் மலர்கள்.....
கரைந்தாலும்
இனிப்பைத் தரும் கற்கண்டுகள்.....
மிதித்தாலும்
சுத்தம் செய்யும்
மிதியடிகள்.....
கடித்தாலும்
சுவை தரும்
கரும்புகள்........
எரித்தாலும்
வெண்மை தரும்
சங்குகள்.....
பெற்றோர்களை
கடவுளோடு ஒப்பிடலாம்....
ஆனால்
கடவுளைக் கூட
பெற்றோரோடு
ஒப்பிட முடியாது.....!!!
_படைப்பு_
*கவிதை ரசிகன்*
நன்றி!