நீயும் எனதென நீயும் எனதென எண்ணி வாழ்வும் போகுதே...
நீயும் எனதென
நீயும் எனதென எண்ணி வாழ்வும் போகுதே வீணே..
இருந்தும்
நானும் மறக்கல உன்னை
கண்ணே..!
என் பார்வைகள் படுதே உன்னே..
உன் நெருக்கம் குறையுமா இன்னும்...
வார்த்தை வருமென வந்தால்
மௌனம் பேசுதே தன்னால்..
எந்நாளும் மாறாமல்
மறவாது மனமே..
கோபம் கோர்க்கும் கண்ணில்
இன்று
பொறுமை பார்க்குதே என்னில்
இளைஞன் ஒருவனாய் சென்று,
அவனுருவாய் கவிஞன் ஒருவனைக்
கண்டானே..
நீயும் எனதென எண்ணி வாழ்வும்
போகுதே வீணே..
இருந்தும்
நானும் மறக்கல உன்னை
கண்ணே...!
நீயும் என்னைக் காணும் நேரம்
என் கண்ணில் குறையும் ஈரம்
காதலும் சேரவே..!அன்பும் கூடவே..!
காதலும் சேரவே..!அன்பும் கூடவே..!
காலம் கொஞ்சம் தான்
வாழாத இந்த வாழ்வை வாழ்வோமா...
இன்பங்கள் சேர்ப்பமா
துன்பங்கள் வெறுப்பமா ...
என் கண்பட்டு உன்
துட்கம் தொலையுமா..
உன் உயிர்ப்பட்டு என்
வெட்கம் குலையுமா..
புதுஉறவுகள் பூக்கவே
காதலும் ஊடலாய் உருக்கொள்ளுமே...
நீலப்பட்டும் நிறம் மாறுமே
அந்நேரம் என்னில் நீ குளிக்கவே...
உன் ஐவிரல் ஒருங்கே சேர்த்து பொன்வளையல் பூட்டி
அதன் ஓசைகள் ஒலிருனும்
என் காதினிலே ..
என் ஓர்விரலில்
சந்தனக்கட்டி குழப்பி கன்னம் நிரப்பி
அங்கே உந்தன் அழகு ஒளியாய் ஒளிருனும்
என் கண்ணினிலே..
ஓரிரு புன்னகை மலராய் மலரனும்
தினமும்
உன் இதழினிலே...
அதனைக் கண்டு
என் மனமும்
மகிழ்வாய் மகிழனும் நன்றா..
~பரத்