எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முள்ளில்பூத்த பூவாட்டம் முத்துபோல பூத்தாயே பூவரசங் கூட்டத்திலே -...

முள்ளில்பூத்த பூவாட்டம்
முத்துபோல பூத்தாயே
பூவரசங் கூட்டத்திலே - நீ
பூப்படைஞ்ச பொன்மயிலே...!

சிட்டுபோல நடையழகாம்
சிறுகுருவித் தலையழகாம்,
பட்டுப்போல் மேனியாளாம் - நீ
பங்குனித் தேர்போலாம்...!

கோரை சிகையழகாம்
கொங்கநாட்டுப் பேரழகாம்
பவளம்போல் பல்லழகாம் - உன்ன
பாத்தவங்க சொன்னாங்க...!

கிழக்கவந்த சூரியனும்
கிட்டவந்து தேடுதம்மா
எட்டருந்து கண்டவளே - நீ
எங்கபோன இக்கனந்தான்...!

நெடுஞ்சாலை வெகுதூரம்
நெஞ்சமெல்லாம் உன்நெனப்பு
சொல்லாம போனவளே - நீ
சோகக்கதை ஆனதென்ன...?

வட்ட மொகத்தோட
வாசமல்லி வெச்சிக்கிட்டு
வாசலில வந்துன்னா - கண்டு
வாயடைக்கும் எட்டூரும்...!

முத்துச் சிரிப்பெடுத்து
முந்தியிலே முடிஞ்சிவெச்சு
சத்தம்கூட போடாம - ஏன்
சந்தியிலே சாஞ்சாயோ...!

கட்டுப்பணம் சேக்கனுன்னு
வெட்டுக்கத்தி தூக்கிக்கிட்டு
விறகொடிக்கப் போனவளே - உனக்கு
விதிகொடுத்த விலையென்ன...?

#வாய்மொழி_இலக்கியம்
#நாட்டுப்புறவியல்
#ஒப்பாரிப்_பாடல்கள்

நாள் : 15-Jun-21, 12:08 pm

மேலே