தீது தரும் போதை . போதை என்பதே தீது...
தீது தரும் போதை .
போதை என்பதே தீது தான்
இதில் எங்கிருந்து தீதைக் காண்பது
மதுபானத்தை தொட்டு உன்
வாழ்வை விட்டாய் மானிடா...
மனிதனின் மாபெரும் அறிவினை
மதுவெனும் சாராயத்தால் இழந்துவிட்டாய்
மழையதும் பெய்தால் கூட
மதுகடை ஓரம் நிற்றல்
பிழையென கூறிச்செல்!!! எனவே,
தீது தரும போதைவேண்டாம்.
சிகரெட், பீடியை உன் அழகிய இதழால் முத்தமிட்டால் ...
உன் உடல் நோயால்
மண்ணுக்கு அழைப்பு வடும்....
எனவே,
தீது தரும் போதை வேண்டாம்...
புகையிலையின் மீதான மோகம்
உன் உயிரானவர்களின் வாழ்வில் கடுஞ்சோகம்..
உடல் மெலிந்து உயிர் நொந்து
நோய் கொண்டு நீ சென்றால்..
உன் மகன் மகள் கண்ணீரை
யார் தொடைப்பார்(ள்)
போதை பேய்களை விரட்டி
கலைகளை போதையாக்கு
வெற்றி உன் பின்வரும் தோழனே!!!
போதையின் தீதையெல்லாம்
போதனை செய்தேன்...
ஆதலால்..,
இதனை படிப்போரெல்லாம்
அன்பானவர் காதில்
ஓதிட வேண்டும்....
எனவே..,
உலகம் வாழ்வின் மயக்கத்திற்கு அடிமையாகட்டும்
போதையின் மயக்கத்திற்கு அல்ல!!!