எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பசுமையான நினைவு இடை விடா அடை மழையின் ஆரம்பம்...

பசுமையான நினைவு


இடை விடா அடை மழையின் ஆரம்பம் இது.//

வயலோர பெருவெளியில் ஓலை குடிசையில் அவளுக்கு நானும் எனக்கு அவளுமாக இணைபிரியா காதலுடனான வாழ்க்கைப் பயணம்.//

அன்றொருநாள் மார்களி மாதம் அந்தி மாலை அஸ்தமனம். பொளுதும் மங்கல் வெளிச்சத்தில் நிழல் சாய, வாடகையாய் கூடவே குளிர் காற்றும் வீச.//  

என் தோட்டத்து மரவள்ளி அவியலும் துணைக்கு கூடவே மிளகாய் சம்பலும் , 
நாவில் ருசியும் நீங்கவில்லை என்னவள் கரம் தொட்ட சூடன தேனீர் தேகத்தில் நுளைந்து மாற்றங்கள் பல செய்ய.//

நடன நாட்டிய இசை போன்றொலித்த இடி ஓசை, துணைக்கு பளிச்சிடும் விளக்குகளாய் மின்னலும் ஒளி தரவே, வேடிக்கை பார்த்த படி நானும் அவளும்....// 

பெரும் இரைச்சல் சத்தத்தோடு பூமா தேவியின் தரை தொட்டன சொட்டு சொட்டாய் மழை துளிகள்.//

சந்தோசப்பெருவெள்ளம் பெருக ஒய்யாரமாய் ஒண்டி நின்ற என்னவளை கட்டியணைத்து பெரும் கூச்சலிடவே பதிலுக்கு அவளும் பாசமாய் முத்தமிட்டாள். //

பரவச பெருவெள்ளம் பெருக துள்ளிக்குதித்து வயல் பெரும் வெளியில்
நானும் அவளும் நாட்டியங்கள் பல ஆடவே நேரமும் எங்களை தொந்தரவு செய்யவில்லை. //

சட்டென ஓய்ந்த பெரு மழை ☔ 
எம் சாகாசங்கள் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. //

ஈரலிப்பின் இம்சையுடன் கூடவே குளிர் காற்றும் தாங்க முடியாமல் இருவரும் தாமதமின்றி குடிசைக்குள் குடி பெயர்ந்தோம். //

அது மீண்டும் ஒரு முறையேனும் கிடைக்காத அழகிய மங்கிய மாலைப்பொழுது....


_கவிப்பொய்கை_
_-ஜவ்சன் அஹமட்-_

பதிவு : Kavipoikai
நாள் : 13-Aug-21, 7:58 pm

மேலே