அனுபவத்தின் குரல் ------------------------------- ஒரு இலக்கை அடைய நினைப்பவர்களும்...
அனுபவத்தின் குரல்
-------------------------------
ஒரு இலக்கை அடைய நினைப்பவர்களும் , அல்லது ஒரு முடிவெடுத்து அதனை நிறைவேற்றிட பயணிப்பவர்களும் அந்த புள்ளியை மட்டும்தான் சிந்திக்க வேண்டும் . எவ்வளவு இடர்கள் வந்தாலும் துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெற்றி காண வேண்டும். சிந்தை சிதையாமல் , சிந்தனை சிதறாமல் பாதை மாறாது பயணிக்க வேண்டும் .
போட்டி மனப்பான்மையும், பொறாமை எண்ணமும் கடுகளவு இருத்தல் கூடாது . அவ்வாறு இருந்தால் வெற்றிப் பெறுவது கேள்விக்குறியாகும் .வாழ்க்கை என்பது தென்றலும் தவழும். புயலும் வீசும். பாதை கரடுமுரடாகவும் இருக்கும். பஞ்சு மெத்தையாகவும் தெரியும். எதையும் ஒன்றாகக் கருதி நடை போட வேண்டும் தோல்வி ஒன்றே முடிவு அல்ல. அதுவே வெற்றியின் முதல் படிக்கட்டு என்று நினைத்து வெற்றியின் முகப்பில் அகம் மலர உழைக்க வேண்டும்.
இது அறிவுரை அல்ல , அனுபவம் அளித்தப் பாடத்தால் அடியேன் வழங்கும் ஆலோசனை .
பழனி குமார்
28.10.2021