எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எலிப் பாட்டு எலி வருகுது எலி வருகுது ஓடி...

                     எலிப் பாட்டு   


எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா….. 
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…   

சந்து பொந்து நுழைந்து வருது ஓடி வா பாப்பா….. 
சொந்த பந்தம் அழைத்து வருது ஓடி வா பாப்பா…..   

குள்ள நரியின் குணததைப் பார்க்க ஓடி வா பாப்பா......
கள்ளம் கொண்ட எலிவருகுது ஓடி வா பாப்பா…..     

மெல்ல மெல்ல எலிவருகுது ஓடி வா பாப்பா… 
பல்லில் நூலைக் கடித்திடும்  ஓடி வா பாப்பா.....

கள்ள எலிகள் பயத்தில் ஓடும் ஓடி வா பாப்பா… 
உள்ளம் கொண்ட வீரததோடு ஓடி வா பாப்பா.....

சின்னஞ் சிறிய நடைகள் போட்டுப் பார்க்க வா பாப்பா….. 
சின்னஞ் சிறிய எலியின் பாட்டு பாடி வா பாப்பா…..   

எலி வருகுது எலி வருகுது ஓடி வா பாப்பா….. 
வலையை விட்டு வெளியில் வருகுது ஓடி வா பாப்பா…   

ஆக்கம்  சு. சுகுமார்      (18.10.2021)

நாள் : 9-Nov-21, 4:30 pm

மேலே