அருவி +++++++++ மழையினால் மலைகளில் உருவானவளே! மலையினில் உள்ளதை...
அருவி
+++++++++
மழையினால் மலைகளில் உருவானவளே!
மலையினில் உள்ளதை உரசி வந்தவளே!
ஓடி வந்தவளுக்கு நின்றிட எண்ணமில்லையோ?
வேகத்தை குறைத்திட முடியாமலே
உயிரைப் பற்றி அஞ்சாமலே
மேலிருந்து சப்தமாய் குதித்து விடுகிறாயே!
அதைக் கண்டு ஆனந்தம் கொள்கின்றனர் பலருமே!
விழுந்தாலும் இல்லாமல் ஓடுகிறாயே!
அருவியே உன்னில் பாடங்கள் பலவும்
மனிதன் கற்றுக் கொள்ள வேண்டுமே!
ஆனால் இரசனை மட்டும் கொண்டே
நனைந்து மகிழ்ந்து சென்று விடுகிறானே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்