எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாந்தம் ஓயா அலைகள் கடலிலே……….. எண்ண அலைகள் மனதிலே……….....

                     சாந்தம்   


ஓயா அலைகள் கடலிலே……….. 
எண்ண அலைகள் மனதிலே……….. 
ஓய்ந்த அலைகள் அனுபவமே……….. 
எண்ண அலையின் முடிவிலே………..   

சாந்தம் சாந்தி … 
சமய நியதி… 
அன்னல் காந்தி… 
போற்றும் அமைதி…   

காலம் கடந்த உண்மை… 
கனவில் கண்ட உண்மை… 
அன்பே உந்தன் மென்மை… 
என்னை கவர்ந்த பெண்மை…   

இறைவன் படைப்பின் அதிசயம்… 
இப்படியும் உருவம் கொடுத்தானே… 
இறைவா நன்றி ஆயிரம்… 
இப்படியும் கவிதை உருவானதே…       

என்னே உந்தன் விந்தை… 
என்னுள் இருக்கும் நாதா… 
என்னை இயக்கும் இறைவா… 
தீருமோ எந்தன் கடனே…   

கீதை பாதை ஆனதே… 
கீதம் நாதம் நீயே… 
மீதம் ஏதும் உண்டோ… 
மிஞ்சி நிற்கும் இறைவா…   

பாடல் ஆடல் பயின்றேன்… 
பட்டம் பெற்று உயர்ந்தேன்… 
பயின்ற கல்வி நிறைவில்லை… 
படைத்த உன்னை மறந்தாலே…   

அம்மா நெஞ்சம் உருகுது… 
அப்பா என்று சொல்லுது… 
அம்மை அப்பன் என்னுள்ளே… 
ஆனந்தம் என்றும் மனதிலே…           

ஆதி அந்தம் அறிந்தவனே… 
அறிவை எனக்குக் கொடுத்திடவே... 
அன்பு பக்தி கொண்டேனே… 
அள்ளி அணைப்பாய் அன்பினிலே…   

கற்பனை ஊற்று கொட்டுது… 
கவிதை எழுதத் தூண்டுது… 
கண்ட கண்ட வார்த்தையேல்லாம்… 
கவிதையாக மாறுது…   

நெஞ்சம் இழுத்துப் பிடிக்குது… 
நில்லா எண்ணம் பறக்குது… 
நிலவே உன்னை நெறுங்குது… 
நினைத்ததையேல்லாம் எழுதுது…   

கொட்டுது கொட்டுது கவிதையிலே… 
சொட்டுச் சொட்டுச் சொல்லினிலே… 
சோகம் என்பது எனக்கில்லை… 
சொந்தம் நீ என்று ஆனதுமே…           

சின்னச்  சின்னக் கண்களிலே… 
சீறிய வார்த்தைகள் கவிதையிலே… 
சீற்றம் பெற்ற வாக்கியமே… 
கவிதை என்ற உருவமே…   

மைகள் தீர்ந்து கொட்டியதே… 
கவிதை என்ற உருவிலே… 
கற்ற எந்தன் மனதிலே… 
கவிகள் கொஞ்சி விளையாடியதே…   

கவிதை கவிதை கவிதை… 
கொட்டுது கொட்டுது கொட்டுது… 
அள்ளு அள்ளு என்றது… 
அதுவே கவிதை ஆனது…   

சுற்றும் முற்றும் பார்க்கையிலே… 
சுற்றும் உலக பாதையிலே… 
சாந்தம் வேண்டி நினைக்கையிலே… 
சாந்தி…..சாந்தி…..சாந்தியே…..  

ஆக்கம் : திரு.சு.சுகுமார் (10.11.2021)
    

நாள் : 10-Nov-21, 7:50 am

மேலே