எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, ஆன்னி சனான பெயரால்...

எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,  ஆன்னி  சனான பெயரால்  இங்கு கூடியிருக்கும் எங்கள் அனைவர் மீதும் உமது ஆவியை பொழிந்தருளும்.  விசேஷ விதமாக  இன்று ஆன்னி  சனானவை ஆசிர்வதித்து உமது தூய ஆவியால் அவரது உள்ளத்தையும், இல்லத்தையும் நிரப்பும். உலக வாழ்வின் மறுதல்களுக்கிடையில் உம்மில் அதிக விசுவாசத்தையும், நம்பிக்கையையம் வைக்கவும். உமது அளவில்லா அன்பை சுவைத்து உணரவும் அருள் வழக்கும். 

அன்பே உருவான இறை ஏசுவே, உமது அன்பில் எங்களுக்கு பங்களிக்க இவுலகில் ஒரு மனிதனாக பிறந்து, மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து எங்களை வாழவைக்க தந்தையின் சித்தப்படி மறித்து , முன்றாம் நாள் உயிர்த்தெழுந்திர். எங்களுக்கு எத்தனையோ நன்மைகள் செய்துவருகிறீர். அவைகள் அனைத்திற்கும் நன்றி செலுத்துகிறோம்.  இன்று ஆன்னி  சனானவை அன்புடன் அரவணைத்து ஆசிர்வதித்தருளும். வயதிலும், குணத்திலும், ஞானத்திலும் உமது அருளிலும் வளர்ந்து, உமக்குள்   என்றென்றும்  வாழ்ந்து ஊழியம் செய்ய அருள் தாரும். 

 பரிசுத்த ஆவியே இங்கு கூடியிருக்கும் எங்கள் ஒவொருவர் மீதும்  எழுந்தருளி வாரும். உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை எங்கள்மீது வரவிடும்.  கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே,  எங்கள் இதயங்களின்  இளைப்பாற்றியே, பிரகாசத்தின் சுகமே,  எங்கள் இன்னல்களின் தேற்றரவே எழுந்தருளி வாரும். 

இந்நன்னாளில் ஆன்னி  சனான பெயரால்  வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற  அவரது பெற்றோர்கள், சகோதரன் சவுல், பெரியப்பா, பாட்டி , தாத்தா, சித்திகளின் குடும்பத்தினர், மற்றும் இங்குள்ள உறவினர் அனைவரையும் ஆசிர்வதித்து  எங்கள்   இதயங்களை  உமது அருளால் நிரப்பும்.  எங்களுக்கும்,  சிறப்பாக  ஆன்னி  சனானவுக்கும் உம்முடைய திருக்கொடைகலையும்,    அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், போன்ற  நற்கனிகளையும்  தந்தருளும். 
 
உமது  அளவில்லா அருளையும், அன்பையும்   அளித்து இந்த இரு பெருங்கொடைகளால் எங்கள் வாழ்வு ஒரு புனிதமான வாழ்வாக அமைய  எங்கள் இதயம் நிறைந்த நன்றியோடு  வேண்டிக்கொள்கிரோம்.  

எங்கள் எல்லோரையும்  ஒருமனமாக்கும் இந்த வைபவம் எங்கள் வாழ்வை உமது  பாதங்களில் காணிக்கையாக அர்ப்பணித்து  நன்றி செலுத்தி எங்கள் வாழ்நாள் முழுவதும் இறைவனுக்கவே வாழ அருள் தருமாறு  உம்மை மன்றாடுகிறோம்.   பொறுமையும் தாழ்ச்சியும் பிறரன்பும், இரக்கமும், தியாக உள்ளமும் எங்கள்  வாழ்வின் அணிகலன்களாக விளங்க  செய்விராக.

 இன்பத்தை ஏற்பது போன்றே, எங்களுக்கு  வரும்  துன்பத்தையும் ஏற்று இறைவனாகிய உமது   திருவுளத்துக்கு பணிந்து,  அதனை புனிதமாக்கிட மன உறுதியை எங்களுக்கு  தந்தருளும். இறையன்பில் நிலைத்து நின்று, எங்கள் அன்பும் ஒவ்வொரு நாளும் வளர்ந்திட செய்விராக. திருகுடும்பத்தை  பின்பற்றி  உமது  திருவுளத்தை நிறைவேற்ற உதவி செய்தருளும்.  ஆமென்.

நாள் : 10-Nov-21, 4:29 pm

மேலே