பட்டம் பட்டம் பாரு... பட்டம் பாரு... உயர்ந்து பறக்கும்...
பட்டம்
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
வண்ண வண்ண பட்டம் பாரு...
வானில் வழியைத் தேடும் பாரு...
கண்ணைக் கவரும் பட்டம் பாரு...
காற்றில் மிதக்கும் பட்டம் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
நூலின் நுனியில் பறக்கும் பாரு...
நூறு கண்கள் வியக்கும் பாரு...
வாலை அசைத்து உயரும் பாரு
வானம் முட்டும் பட்டம் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
வானில் பட்டம் பறக்கும் பாரு...
வந்த கவலை மறக்கும் பாரு...
சேனை போல சிறுவர் பாரு...
சின்ன பட்டம் விடுவர் பாரு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
பட்டம் போல உயர நினைத்து
பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்து
பட்டப் படிப்பை நீயும் நாடு...
பதவி புகழுடன் உயர்ந்து வாழு...
பட்டம் பாரு... பட்டம் பாரு...
உயர்ந்து பறக்கும் பட்டம் பாரு...
ஆக்கம் சு.சுகுமார்(19.11.2021)