ஒரு பாடல்..... அது ஓர் அழகான பாடல்... தென்றலை...
ஒரு பாடல்.....
அது ஓர் அழகான பாடல்...
தென்றலை விட மிருதுவாக உணர்வுகளை தீண்டுகிறது...
இப்படியொரு பாடல் கேட்டு எத்தனை நாளாயிற்று என்று நெகிழச் செய்கிறது....
சைவம் படத்தில்....
அழகே அழகே , எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு .
மலர் மட்டுமா அழகு
விழும் இலை கூட ஒரு அழகு...
என்று தொடர்கிறது நா.முத்துகுமாரின் அருமையான வரிகள் ஜீவீ பிரகாஷின் மிக அழகான இசையூட்டலில் !
அந்த மழலை குரலில் பரவிக் கிடக்கும் காந்தம் எந்த இரும்பு இதயத்தையும் ஈர்த்து ஒட்டிக் கொள்ளும்.....
உன்னிகிருஸ்ணன் என்ற ஒரு மகத்தான இசைக் கலைஞரின் மகள்....உத்தரா....
அலட்டல் இல்லாமல் அள்ளிப் போகிறாள் நெஞ்சத்தை....
பூக்களை விட மொட்டுகளுக்குள் ஒளிந்துக் கிடக்கும் வாசம் அலாதியானது.....உத்தரா என்ற மொட்டு அதை நிரூபித்திருக்கிறது !