எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த பாடல்தான் என் வாழ்வின் ஆரம்பம் மற்றும் அஸ்தமனம்...

இந்த பாடல்தான் என் வாழ்வின் ஆரம்பம் மற்றும் அஸ்தமனம் என்று சொல்லலாம்,,, இந்த திரைப்பாடலை எத்தனையோ முறை நான் அப்பொழுதெல்லாம் மேடையில் பாடியிருக்கின்றேன் ,,,, இந்த பாடலுக்கும் என் வாழ்க்கைக்கும்,,, மிக நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது என்றே சொல்லலாம்,, இந்த பாடல் இல்லாமல் நானில்லை என் அந்தரங்கமும் இல்லை ,,,,,,,,,,,,, அனுசரன்

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
(இரு கண்கள்..)

என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான்
ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
(இரு கண்கள்..)

நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே
நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்
(இரு கண்கள்..)

ஏன் சிரிக்கின்றேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)
(என்னோடு..)
(இரு கண்கள்..)

லிங்கை இணைத்துள்ளேன்


நாள் : 3-May-14, 2:53 pm

மேலே