எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதின் எதிரொலி - 1 -------------------------------------- இதுவரை நான்...

   மனதின் எதிரொலி - 1

--------------------------------------

இதுவரை நான் எழுதி இருக்கின்ற அல்லது எழுதி வரும் கவிதைகள் ( Poetry ) ஆனாலும் சரி மற்றும் உரைநடை ( Text ) ஆனாலும் சரி கிட்டத்தட்ட 95% பொதுவான கருத்து அடிப்படையில் அல்லது சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையின் பேரில் குற்றங்கள் குறைகளை சுட்டிக்காட்டுவது , களைய வழி கூறுவதும், அதேபோல நடக்கும் நல்ல நிகழ்வுகளை பாராட்டுவதாக மட்டுமே அமைந்திருக்கும் . அதை மனதில் கொண்டு தான் முகநூலில் பதிவு செய்து வருகிறேன் . சில கருத்துக்கள் எனது தனிப்பட்ட அனுபவத்தின் வாயிலாக, "அனுபவத்தின் குரல்" என்ற தலைப்பிலும் , பலவற்றை வாழ்க்கையில் நடந்து முடிந்த பல நிகழ்வுகள் மூலம் " வாழ்க்கை பாடம் " எனும் தலைப்பிலும் எழுதியுள்ளேன் , எழுதியும் வருகிறேன் , இனியும் எழுதுவேன் எனது இறுதி மூச்சு உள்ளவரை . என் இதயத் துடிப்பு நிற்கும் வரை . இதனை ஒரு கொள்கையாக சபதமாக எடுத்துள்ளேன் . அது மட்டுமின்றி , இங்கு கவிஞர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர் . மேலும் உருவாகி வருகின்றனர். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .

அதிலும் பலரின் கவிதைகள் , அது மரபுக் கவிதைகள் ஆனாலும் புது கவிதைகள் ஆனாலும் மிக சிறப்பாக இருக்கிறது . நான் அவர்கள் வரிசையில் நிற்பதற்கு எனக்கு தகுதி இல்லை இல்லாதவன் என்பதை நன்கு உணர்ந்தவன் . எனது உயரம் எனக்கு தெரியும். இன்றுவரை சுமார் 3250 கவிதைகள் எழுதி இருக்கிறேன் .அதில் பலவற்றை தவற விட்டுவிட்டேன் . ஆகவே அனைவருக்கும் புரியும் வகையில் உரைநடை வடிவில் தொடர்ந்து எழுதலாம் என்று நினைக்கிறேன் . 

வாழ்க்கை பாடம் மற்றும் அனுபவத்தின் குரல் , இரண்டும் தலா 100 பகுதிகள் எழுதி இருக்கிறேன் . இடையிடையே அவ்வப்போது சில கவிதைகள் இடைச்செருகலாக வரும் . என்ன செய்வது அனைத்தையும் நீங்கள் படிக்க வேண்டும் என்பது காலத்தின் கோலமா அல்லது காலத்தின் கட்டளையா என்று தெரியவில்லை . உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் எனது நன்றி கலந்த வணக்கங்கள் ! 

மேலும் எனது பதிவுகள் மூலம் நான் எந்த ஒரு தனிப்பட்ட நபரைப் பற்றியோ , குறை கூறுவதற்கோ அல்லது தாக்கியோ எழுதவில்லை . என் அனைத்து எழுத்துக்களும் பொதுவான ஒன்று. மற்றவர்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்ற தவறான நோக்கமும் இல்லை. இதை பற்றி தங்களது மேலான கருத்துக்களை யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் . நான் சமுதாயம் எனும் பெருங்கடலின் ஒரு துளியே . 


பழனி குமார் 
 04.12.2021

நாள் : 6-Dec-21, 9:30 pm

மேலே