எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதின் எதிரொலி - 2 ***************************** இன்று மாலை...

  மனதின் எதிரொலி - 2
*****************************


இன்று மாலை சற்று நடக்கலாம் என்று நினைத்து , அதாவது பகுதிநேர நடை பயிற்சி ( Part time walking ) சென்றேன் . ஆம் , அப்படித்தான் கூற வேண்டும் , தினசரி செல்ல முடியவில்லை . அவ்வப்போது உடல்நிலை கோளாறு . நான் திரும்பி வரும்போது ஒரு நண்பரை சந்தித்தேன் . அப்படித்தான் இப்போதெல்லாம் சிலரை சந்திக்க முடிகிறது . இதை கூறுவதற்கு காரணம், அவர் எங்கள் வீட்டிற்கு மிக அருகில் இருக்கிறார் . அவரிடம் என்னிடம் நலம் விசாரித்தார் . நான் அவரது குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தேன் . ஒவ்வொருவரைப் பற்றி மேலோட்டமாக கூறினார் . ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன் . அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அனைவரும் பிரிந்து சென்றுவிட்டனர் என்றார். கடந்த பத்து வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை என்றார். சற்று அதிர்ச்சியாக இருந்தது.

அவர்கள் அனைவரும் ருகாலத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்கள் . இது பெரும்பாலான குடும்பத்தில் நடைபெறுகிற ஒன்று தான் என்பதை மறுக்கவில்லை . எவ்வளவுதான் ஒற்றுமையாக இருந்தாலும் சொத்து , பணம் என்று வரும்போது குடும்பத்தில் விரிசல் என்பது இயற்கையான ஒன்றாகிவிட்டது . இதில் என்ன வேடிக்கை எனில் , தலைமுறைகள் மாறினாலும் பகையுணர்வு மறையவில்லை . ஒன்று சேராமல் உறவு முறைகள் பலருக்கு மறந்து விடுகிறது . குறிப்பாக வளரும் தலைமுறைக்கு யார் உறவு என்றும் தெரியாமல் போகிறது . தொடர்பு முற்றிலும் அறுந்து விடுகிறது . இது நடுத்தர வர்க்கத்தில் மட்டும் இல்லை . சமுதாயத்தில் பணக்காரர்கள் என்று கூறப்படும் பெரிய குடும்பங்களிலும் நிகழ்கிறது .

இனியேனும் இது போன்ற நிலை வராமல் இருக்க வேண்டும் என்பது என் மனதில் எதிரொலிக்கிறது . காலம் தான் மாற்ற வேண்டும் .

பழனி குமார்
 04 .12 . 2021 

நாள் : 6-Dec-21, 9:36 pm

மேலே