"*அப்பா*" ஓய்வறியா சூரியன் ! ஒவ்வொரு பிள்ளையின் முதல்...
"*அப்பா*"
ஓய்வறியா சூரியன் !
ஒவ்வொரு பிள்ளையின் முதல் நாயகன் !
கண் கலங்கி பார்த்ததில்லை !
எங்களை கண் கலங்க விட்டதில்லை !
தாய்கூட என்றாவது ஒருநாள்
சொல்லி காட்டி விடுவாள் !
பத்து மாதம் சுமந்த கதையை !
ஆயுசுக்கு சுமந்தாலும்
அலுத்து கொள்ளாதவர் அப்பா !
அப்பா வண்ணம் தீட்டபடாத ஓவியம் !
வார்த்தையில் அடக்க முடியாத காவியம் !