அவள் கதாபாத்திரமே அப்படிதான்!!! மாயவலையில் சிக்குண்டதை போல் திக்கற்ற...
அவள் கதாபாத்திரமே அப்படிதான்!!!
மாயவலையில் சிக்குண்டதை போல் திக்கற்ற சிந்தனையில் சித்தார்த்தனை மிஞ்சிவிடுவாள். நத்தைக்கூட்டிற்குள் தன்னை முடக்கிகொண்டு ஓங்கார ஓலமிடுவாள் துயரத்தின் விளிம்பில் தத்தளிக்கும் போதெல்லாம். அதற்காக சம்பந்தப்பட்டவர்களை குறை சொல்லி முடங்கி கிடப்பவளோ அல்லது பழி வாங்குபவளோ கிடையாது!!! நடந்தவை கடந்தவையே என்று தன் கண்ணீர்துளிகளையும் வலிகளையும் வழிகளாய் அமைத்து வடுக்களை வலுவாய் மாற்றுபவள்! அவள் அப்படிதான் !!
- கௌசல்யா சேகர்