சிறந்தநன் நாடாம் தமிழ்நாட் டினிலே பிறப்பே பெருமைதான் பார்....
சிறந்தநன் நாடாம் தமிழ்நாட் டினிலே
பிறப்பே பெருமைதான் பார்.
அருந்தமிழ் கற்றுத் தெளிந்து அதனால்
விருந்து தருவோர் இறை
குறைந்து அறிந்து தமிழில் எழுதின்
சிறந்த படைப்பா குமோ
படையை விடவும் பலத்தை உடைய
படைத்திடும் நூல்கள் பல
எழுதி எழுதி தமிழில் செழித்தால்
பிழிந்த கனிச்சா றுநீ
---- நன்னாடன்.