எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனுபவம் ஒன்றே புரிய வைக்கும் வாழ்க்கை ஒரு வட்டமென...



அனுபவம் ஒன்றே புரிய வைக்கும் வாழ்க்கை ஒரு வட்டமென 
காதலித்த பின் இடையில் கைவிட்டு பிரிகின்ற இருவரில் ஒருவர் வேறொருவருடன் இணைந்து வாழ்கின்ற காலத்தில் மீண்டும் பிரிவினை வருமானால் காதலித்தவரை நினைத்து வருந்துவதும் அவசரகதியில் எடுத்த முடிவை ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் மறுபடியும் சந்திப்பது வாழ்வு ஒருவட்டமென உணர்ந்திட செய்தல்  !

விழி வழியே சந்தித்து மெளன மொழி மூலம் உரையாடி இதயத்தால் இணைந்த காதலர்கள் பிரிந்த பின் உருவாகும் இந்நிலை தவிர்க்க 
சிறு ஊடலால் எழுவதை மனம் விட்டு பேசி உடனடி தீர்வு கண்டால் பிரிவதும் மீண்டும் இணைய துடிப்பதும் இல்லாத நிலை உருவானால் புரிதல் வலுவாகி இன்பமான வாழ்க்கை உருவாகும்  !


பழனி குமார் 
02.07.2023

நாள் : 3-Jul-23, 1:58 pm

மேலே