எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#மின்னல்...க்கு ஒரு கவிதை விண்வெளிக்கு எந்த நடிகை சென்றாள்...

#மின்னல்...க்கு ஒரு கவிதை

விண்வெளிக்கு
எந்த நடிகை சென்றாள்
இப்படி
போட்டோ எடுக்கும் ஔி
வருகிறது..?

பூங்கொடியை
பார்த்திருக்கிறேன்
பூசணிக்கொடியை
பார்த்திருக்கிறேன்
அட ....! இது என்ன
ஒளிக்கொடியோ....?

யார் வருகைக்காக
யார் வானவேடிக்கையை
இப்படி
நடத்துகின்றார்கள்.....?

தீப்பெட்டி
இருக்கும் காலத்தில்
வான்மங்கைய
எதற்கு
கார்மேக கற்களைக் கொண்டு
தீ மூட்ட முயற்சிக்கிறாள்...?

நீ கண்களை
பறித்து கொண்டு
போய் விடுவதாக
சொல்கிறார்கள்........
ஊமை விழிகள்
தமிழ் திரைப்படம் பார்த்து
கற்றுக் கொண்டாயா...?

மேகப்புற்றிலிருந்து
எங்குப் போகின்றன
இந்த ஔிப்பாம்புகள்?

கவிதை ரசிகன் குமரேசன்

நாள் : 25-Feb-25, 8:55 pm

மேலே