என் வீட்டு வாசல் ஒரு பூம்பூம் மாட்டுக்காரன் அவன்...
என் வீட்டு வாசல்
ஒரு பூம்பூம் மாட்டுக்காரன்
அவன் சொல்வதற்கெல்லாம்
அந்த மாடு தலையாட்டிக்கொண்டிருந்தது
மனிதனைப் போல
ஒரு கம்பீரமான யானை
தெருவில் தன் துதிக்கையை நீட்டிப்
பிச்சை வாங்கிக் கொண்டிருந்தது
மனிதனைப் போல.