எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று முகநூளில் படித்தது.....திகில் .......பிடித்தது # இரண்டே வாக்கியங்களில்...

இன்று முகநூளில் படித்தது.....திகில் .......பிடித்தது


# இரண்டே வாக்கியங்களில் திகில் #

16

பல வருடங்களாக ஒவ்வொரு நாள் இரவும் ஆபரேட்டர் வேலை முடிந்து தனியாகவே சைக்கிளில் வீடு திரும்புகிறேன். மரங்களின் மேல் சலனமற்று நிற்கும் அவற்றை நிமிர்ந்து நோக்காதவரை எந்தப் பிரச்னையும் இல்லை.

17

வெட்டியானாக வேலை பார்க்கும் அவனிடம் உனக்கு அங்கே தனியாக பயமாக இல்லையா என்று கேட்டேன். இதுநாள்வரை தனியாக இருந்ததே இல்லை என்றான்.

18

தினமும் நள்ளிரவில் தவறாமல் அந்த அழைப்பு வருகிறது என்றாலும் நான் எடுத்துப் பேசுவதில்லை. அது ஒரு பழைய, பேட்டரி இல்லாத, சிம் இல்லாத செல்போன் என்பதால் கூட இருக்கலாம்.

19

பிரேக் பிடிக்காத பஸ் அந்த சாலையோர பேருந்து நிறுத்த டீக்கடையில் நுழைந்து ஐந்து பேரை பலி கொண்ட பிறகு அந்தக் கடை சிதிலமாக அப்படியேதான் கிடக்கிறது. இரவின் கடைசிப் பேருந்தில் வந்து இறங்கும் உள்ளூர் ஆசாமிகள் அங்கே எப்போதும் அமர்ந்து அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களை ஏனோ இப்போதெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

20

கொள்ளுத்தாத்தாவின் வீடு பல தலைமுறைகள் பாரம்பரியம் மிக்கது என்பதால் நான் தனியாக அங்கேயே வசித்து வருகிறேன். திடீரென்று இரவு விழிக்கையில் வெளியில் கேட்கும் பேச்சுக் குரல்களும் அப்போது ஆளின்றி வெறுமையாக இருக்கும் புகைப்பட சட்டங்களும் மட்டுமே தொல்லையாக இருக்கிறது.

[இப்போதைக்கு முற்றும்]

- ஷான்

பதிவு : சர் நா
நாள் : 3-Jun-14, 1:11 pm

மேலே