எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிவப்பு மலர் தேன் குறையாத மலர் தினம் ஒரு...

சிவப்பு மலர்
தேன் குறையாத மலர்
தினம் ஒரு வண்டு
பகலில் பந்தி போடும்
சிவப்பு ரோஜா(நான்) ....................

வேருக்கு(தந்தை) தெரியாது
அது மண்ணுக்குள் இருக்கிறது
இலைகள்(உடன்பிறப்பு) கிடையாது அது
இறைவன் தவறியது
தண்டொன்று(அன்னை) உண்டு அது
தள்ளாடுகின்றது ..................

தண்டிற்கும் சொல்லவில்லை
நான் விலை மலர் என்று
சொன்னால் தள்ளாடும் அதன் இதயம்
துண்டாகிவிடும் இல்லை
என்னை உதிர்த்து விட்டு மண்ணில்
தன் வேர் சேர்ந்து விடும் .............

பகலில் இம்மலர் பந்தி போட்டால்
இரவில் அந்த தண்டு பசியாறும்
பறித்து சூட வந்தவர் எல்லாம் தண்டை
பிரித்து விட்டு வர சொல்ல
வளர்த்து விட்ட அதை மறந்து
நான் மட்டும் எப்படி செல்ல..................

பலரின் பசி தீர்க்கும் இம்மலருக்கும்
பசிக்கிறது நல்வாழ்வை தேடி
ருசி பார்த்து செல்லும் வண்டுகளுக்கு
என் பசி தெரிய வாய்ப்பில்லை
தெரிந்தாலும் பயன் இல்லை .............

என் மலர் மேனி வாடும் வரை
பகலில் இதழ் திறந்து காத்திருப்பேன்
என் தண்டை இருக்கும் வரை காத்திருப்பேன் ........

வாழ்வளிக்க யாரும் இல்லை
வாக்கப்பட வசதி இல்லை
என் வீட்டை காவல் காக்க வேண்டும் என்று
பலரின் காதல் பூவாய் வாழ்கிறேன் இங்கு ...........

இது சரியோ தவறோ
திண்டாடும் என் வாழ்கையை
குறைந்தபட்சம் இந்த வண்டுகளாவது
கொண்டாடட்டும் ............

இந்த ஒற்றை மலர் சிகப்பு
பகுதியில் இருக்கவில்லை
சிகப்பாகவே பிறந்து விட்டது
என்ன செய்ய .............................

நாள் : 3-Jun-14, 12:50 pm

மேலே