எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருள் தார் ஒழுகிய வேளை மார்கழி பொழிய வெண்படல...

இருள் தார்

இருள் தார் ஒழுகிய வேளை
மார்கழி பொழிய
வெண்படல பூஞ்சோலை
நடுங்க பயந்து முன்பே
இதழ் மூடிய மலர்கள்
மேக போர்வைக்குள் தஞ்சம் புகுந்த
நிலவு
செத்து மடிந்த சத்தமிடும் உலகு
எங்கும் அமைதி என்னுடன் நீ

அடிக்கடி உதிர்ந்து விழும் இலைகள்
இணை தேடி கவிபடிக்கும் தவளை
இரை தேடி அலைந்து திரியும் ஊர்வனம்
இதை தவிர எங்கேனும் தெரிகிறதா ஊர்ஜனம்
என சுற்றி அலைந்த கண்களோடு நான்
எனை தவிர வேறேதும் தெரியாதவளாய்
எனை பார்த்தபடி நீ

இரத்தம் உறையாது தடுத்தபடி
என் மார் சூட்டில் உன் முகம்
சத்தம் வருகையில் எல்லாம்
வேர்த்து விறுவிறுக்கும் நம் முகம்

மீண்டும் கிடைக்குமோ கிடைக்காதோ .........?
என கட்டி அனைத்தும் எட்டி பார்க்காத மோகம்
உச்சந்தலை முத்தத்தில் எட்டிப்பார்த்த சோகம்
மினுமினுக்கும் கண்ணீர்
முனுமுனுக்கும் உதடு

இறப்பேன் என நீ
இறப்போம் என நான்
இருப்பீர்கள் என சொல்ல நாதி அற்ற நாம்

சிறு சிறு தழுவல்கள்
அடிக்கடி விலகல்கள்
மறந்தும் வெளிவரா சிரிப்பு
மறு முறை சந்திப்போமா எனும் தவிப்பு
நடு ஜாமம் வரை
நடந்தேறிய போராட்டம்

இறுதியாய் கண்ணீருடன் ஒரு
துவர்க்கும் முத்தம்
சந்திக்க நாள் குறித்து நகர்ந்த
சிறைக்கைதிகளாய் நாம்

ஜாதிக் கூண்டிலிருந்து தப்பி
இரு பறவையின் இரவு நேர சந்திப்பு ..........................

மேலும்
http://eluthu.com/kavithai/197983.html

- கவியரசன் புது விதி செய்வோம்

நாள் : 9-Jun-14, 12:33 pm

மேலே