நம் கண்முன்னே ஒரு கொடூரம்" - தமிழகத்தில். சேலம்...
நம் கண்முன்னே ஒரு கொடூரம்" - தமிழகத்தில்.
சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சென்றாயன் பாளையத்தில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து, இறந்த அக்குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிய மரத்தில் கயிறு கட்டி தொங்க விட்டுள்ளனர் 5 மனித மிருகங்கள்..
கடந்த பிப்ரவரியில் நடந்த இந்த கொடுரத்தை செய்த ஈன பிறவிகள் 5 பேரும் இப்போது ஊருக்கு ஜாலியாக இருக்க, இறந்த சிறுமியின் ஏழை குடும்பம் அந்த ஊரில் வாழ முடியாமல் வெளியேறி சேலம் ஆத்தூருக்கு அருகே மனதை வேதனையும் இயலாமையும் வாட்ட கண்களில் கண்ணிரோடு கூலி செய்து உயிர் வாழ்கிறது..
பணத்திற்காக எத்தனையோ வழக்குகளில் பொய் சாட்சிகளை தயார் செய்து நிரபராதிகளை சிறையில் தள்ளும் காவல் துறை, அதே பணத்திற்காக ஊரின் நடுவே நடந்த இந்த கொடுரத்திற்க்கு யாரும் சாட்சி சொல்ல வரவில்லை என்று காரணம் கூறி 3 மாதங்களாகியும் அந்த 5 பேருக்கும் எதிராக குற்றபத்திரிகை தாக்கல் செய்யவில்லை, அதையே காரணம் காட்டி அந்த ஈனப் பிறவிகள் 5 பேரும் நீதி மன்றத்தில் ஜாமின் வாங்கி விட்டார்கள். போலிசார் முழு மனதுடன் முயற்சித்திருந்தால் நிச்சயம் சாட்சிகளோடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரமுடியும்.ஆனால் செய்யவில்லை காரணம்.
கொலை செய்யப்பட்ட சிறுமி "பூங்கொடி" வேறு சமூகம், குற்றவாளிகள் வேறு சமூகம், அதில் முக்கிய குற்றவாளியான "பூபதி" பாட்டாளி மக்கள் கட்சியின் 13 வது வார்டு கவுன்சிலர், ஊருக்குள் கந்து வட்டி தொழில்செய்பவன், ஊரின் தாதா, பண வசதி உள்ளவன், இந்த தகுதிகள் போதாத நம் நாட்டில் குற்றம் செய்யவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும்.
இன்று அந்த குழந்தைக்கு நடந்தது நாளை நம் வீட்டு குழந்தைக்கும் நடக்கலாம் என்ற உண்மை தெரிந்திருந்தும் அந்த ஊரில் ஜாதிக்கும், பணத்திற்க்கும் கட்டுபட்டு யாரும் சாட்சி சொல்ல வராமல், பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது போல் எந்த உதவியும் செய்யாமல், சிறு ஆறுதலும் சொல்லாமல் ஒதுக்கி வைத்து விட்டார்கள். குழந்தை இறந்த சோகமும் ஊரார் ஒதுக்கி வைத்த சோகமும் ஒரு புறம் இருக்க, மகளை சின்னா பின்னமாக்கி கொன்ற பாவிகள் ஊரில் கண்முன்னே சுதந்திரமாக நடமாடுவதை கண்டு, இயலாமை வாட்ட அந்த ஏழை தந்தை இருக்கும் இரண்டு குழந்தைகளையாவது உயிரோடு காப்பாற்ற ஊரை விட்டு வெளியேறி வயிற்று பிழைப்பிற்காக கட்டிட கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்.. அந்த படிக்காத ஏழை தந்தை பரமசிவன் வார்த்தை படி..
ஊரில் யாரும் முகம் கொடுத்து ஒரு வார்த்தை கூட பேசறது இல்லிங்க, இருக்கிற இரண்டு பிள்ளைகளும் பயந்து பள்ளிகூடம் போக மாட்டேன்றாங்க, வேற வழி இல்லாம அந்த ஊரை விட்டே வந்துட்டேங்க, என் பிளளைய கொன்னவங்க கண்முன்னே ஜாலியா சுத்துறத பாக்கும் போது தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையே போச்சு.. இனி ஆண்டவன் தான் ஏதாவது செய்யனும்.. வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட மட்டும் அந்த ஊருக்கு போறேன். இப்போதைக்கு அதுதான் எனக்கும் அந்த ஊருக்கும் உள்ள உறவு" என கண்ணிரோடு சொல்கிறார்..
இத்தனை கொடுமைக்கு பின்னும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்கிற நேர்மையோடு வட்டி கட்டும் அந்த படிக்காத ஏழை தந்தைக்கு நீதி கிடைக்க வேண்டாமா..? தோழர்களே நம் நாட்டில் ஏழைகளுக்கெல்லாம் இருக்கும் ஒரே சொத்து நம்பிக்கை மட்டுமே.. அந்த நம்பிக்கை பொய்யாக கூடாது..
ஒரு சிறு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு, பணத்தையும், அதிகாரத்தையும் கொண்டு சிறு தண்டனை கூட இல்லாமல் தப்பிக் முடியும் என்ற நிலை இருக்குமானால், இந்த நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம், இதைபடித்து கொண்டிருக்கும் நம் வீட்டிலும் ஒரு நாள் இதே போன்ற துயரம் நடக்க வாய்ப்பண்டு. . இதை தடுக்க நம்மாலான ஒரு சிறு முயற்ச்சி இந்த செய்தியை பலருக்கும் பகிருங்கள், அதன் பலனாக இந்த செய்தி ஒரு நேரமையான காவல்துறை அதிகாரியை, அல்லது ஒரு நீதிபதியை, அல்லது ஒரு நேர்மையான அரசியல் வாதி மூலம் முதல்வரையும் எட்டாலாம்.. எட்ட வேண்டும்.. இறந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும். முயற்ச்சிப்போம் தோழர்களே..