எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சத்தான சிவப்பு அரிசி சிவப்பு அரிசியை (பிரவுன் ரைஸ்)...

சத்தான சிவப்பு அரிசி

சிவப்பு அரிசியை (பிரவுன் ரைஸ்) தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி என்றும் சொல்வோம். இதன் கெட்டியான வெளித் தோலுக்கு (உமி) அடுத்ததாக மெல்லியதாக சிவப்பு நிறத்தில் மேல் தோல் (தவிடு) இருக்கும். இதை நீக்கி, பலமுறை தீட்டப்பட்டு அனைத்துச் சத்துக்களும் இழந்த பின் கிடைப்பதுதான் நாம் வழக்கமாகச் சாப்பிடும் வெள்ளை அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. வெள்ளை அரிசியில் பட்டைத்தீட்டும்போது இவை வெளியேறிவிடுவதால், இந்தச் சத்துக்கள் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. தானிய வகைகளில் வைட்டமின் ஈ இந்த சிவப்பு அரிசியில் மட்டும்தான் உள்ளது. நார்ச் சத்தும் இதில் உள்ளது. எனவேதான் இந்த சிவப்பு அரிசி ஓர் முழுமையான தானியமாக இருந்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நார்ச் சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலபமாகும். இந்த நார்ச் சத்சானது, புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக்கொள்ளும். இதில் இருக்கும் மாவுச் சத்து, ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது. சிவப்பு அரிசியில் உள்ள‌ தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

நாள் : 1-Jul-14, 3:47 pm

மேலே