டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க..." உங்க ஆட்டுக்கு...
டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க..." உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..?"" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "" வெள்ளைக்கு..! "" புல்லு..! "" அப்ப கருப்புக்கு..?!"" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "" இதை எங்கே கட்டி போடறீங்க..? "" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "" வெள்ளையை..! "" வெளில இருக்குற ரூம்ல..! "" அப்ப கருப்பு ஆட்டை..?! "" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "" கருப்பு ஆட்டை..! "" தண்ணில தான்...! "" அப்ப வெள்ளையை..?! "" அதையும் தண்ணிலதான்..! "பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்.." லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானேசெய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்பவெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "" அப்ப கருப்பு ஆடு..?!! "" அதுவும் என்னுதுதான்..!!"" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! "