இறைவன் தந்த வரமல்லவா நீ எனக்கு ஈர நெஞ்சம்...
இறைவன் தந்த வரமல்லவா
நீ எனக்கு
ஈர நெஞ்சம் உள்ளவளாய்
உனை நிறுத்து
அன்பு என்ற சொல்லுக்கோர்
அர்த்தம் சொல்ல
மண்ணுலகம் வந்தவள்தான்
இன்றெமக்கு
அந்த அர்த்தம் அன்னையே
வேறு யார்தான் சொல்வது
அன்னை அவளை இறைவன்
படைத்தான்
நம்மை ஏனோ அவளே
படைத்தாள்
நமைக்காக்க வந்த கடவுளும்
அவள்தானே