எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரமலான் வந்தால் நீயும் வருவாய் நினைவில் வந்து சுவைடா...

ரமலான் வந்தால்
நீயும் வருவாய்
நினைவில் வந்து
சுவைடா என்பாய்

அன்று சுவைத்தது என்
எண்ணம் தன்னில்
அன்பு தந்ந நீ
என்றும் என்னில்

பிரியாணி தந்து
பகிர்வாய் நண்பா
பிரியமாய் கைபற்றி நாம்
நகர்ந்தோம் நண்பா

இன்று அதன்
காணல் மட்டும் தெரிகிறது
கண்கள் உனை
காண எண்ணி தவிக்கிறது

எங்கோ மூலையில்
நீயும் நானும்
கல்லூரி முடிந்ததில்
பிரிந்தோம் நாமும்

மதமும் இல்லை
ஜாதியும் இல்லை
மனதை மட்டும்
ஜாதியாய் கொண்டோம்

அம்மா என்றே அழைத்தேன்
அண்ணா என்றே அழைத்தேன்
தங்கை என்றே அழைத்தேன்
உன் சொந்தம் எல்லாம்
என் சொர்க்கம் போலே
இருந்த நாட்கள்
இன்று நினைவில்
கொண்டேன்...............!

மச்சான் எங்கடா இருக்க
நவாஸ் அம்மாகிட்ட இருந்து
பிரியாணி கொண்டு வாடா............!

ரொம்ப மிஸ் பண்றன்டா உன்னையும் அம்மா ஸ்பெஷலையும்........

அப்பறம் நண்பர்களே சென்னை கேளம்பாக்கம் பக்கம் யார்னா முஸ்லீம் தோழர்கள் சகோதரர்கள் இருந்தா வாங்கலேன் ஒரு காபி சாப்டுகிட்டே பேசுவோம்...........!

ஹா ஹா ஹா

இஸ்லாமிய சகோதர
சகோதரிகள் அனைவருக்கும்
இனிய ரமலான் தின
நல்வாழ்த்துக்கள்....

நாள் : 29-Jul-14, 3:10 pm

மேலே