எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைபோல ஆடி ஓரிடம் நில்லாமல் சுற்றித்திரியும் காற்றே கேள்........

அலைபோல ஆடி ஓரிடம் நில்லாமல் சுற்றித்திரியும் காற்றே கேள்.....

என் மனம் உன்னைவிட சுற்றுவது நூறு மடங்கிற்கு மேல்....

மண் மீது உரிமை கொண்டு ஆடாத ஆட்டம் போடும் மனமே இதெல்லாம் பொய்யென்றுணர்வாயா.....

மெய் உயிர்போன பின்னே உடல் முடிவு இந்த மண்ணுக்குள்ளே என்பதுவே மெய்யென்றுணர்வாயா......

கண்ணில் பட்டதெல்லாம் தனக்கும் வேண்டும் என்கிறாய்

குரங்கிற்கு மோசமாய் எண்ணம் விட்டு எண்ணம் தவுகிறாய்....

மாயமனமே பேய் என்பதுவோ உனது குணமோ....

மதிகூறும் நற்சொல் காதில் கேட்பதில்லை உனக்கு....

விதி முடிந்த கடைசியில் ஒருபுடி மண்கூட மிஞ்சப் போவதில்லை எனக்கு....

என் புத்தி கூறும் உண்மைகளையே ஒத்தி வைக்கிறாய்....

இந்த பொய் உலக இச்சைகளிலேயே சுத்தி நிற்கிறாய்....

மரித்துப் போகும் உடலை ஆட்டுவிக்கும் மாய மனமே

பேய் என்பதுவோ உன் குணமோ.....

பதிவு : சிவா
நாள் : 6-Aug-14, 11:28 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே