எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வளர்ச்சியின் வாசல் நடைப்பழகுதல் -நீ தளர்ச்சியின்று பழகு நடை...

வளர்ச்சியின் வாசல் நடைப்பழகுதல் -நீ
தளர்ச்சியின்று பழகு நடை

காலூன்றிக் கவனம் கவர்ந்து நடைப்பழகு
கால்தோறும் களிப்பு பூசி

நடையினில் தென்றலாய் இரு -வழித்
தடைகளில் கவனம் மிகுந்து..

பூக்கும் புன்னகை ஏழைகளுக்கு -நாளும்
சேர்க்க திசைகள் தேடு..

தடுமாறும் நடை மழலைச் சொத்து
நிலைமாற்ற பழகு நடை..

நிலவிலும் பதித்திட நாளும் நீ
காலடி வைத்துப் பழகு

வலி வழி விழிகள் உண்டிங்கு
பழி துடைக்க நட

துயரம் துடைக்கும் தூயவனாய் இருந்திட
வியர்வை சிந்தி நட

பட்டாம்பூச்சிகள் பாதையாய் கிடக்கின்றன -உனது
மட்டில்லா பழகு நடைக்கே

தளிரும் புல்லும் பனித்துளியும் மயிலிறகும்
அளிக்கும் பாதை உனக்கு

பதிவு : agan
நாள் : 8-Aug-14, 8:20 am

மேலே