மதமா, மதமாற்றமா? பிறப்பால் விளைந்த வரம் வளர்ப்பில் இட்ட...
மதமா, மதமாற்றமா?
பிறப்பால் விளைந்த வரம்
வளர்ப்பில் இட்ட உரம்
களைப்பில் நாம் இருந்தால்
மறக்கும் நம் குணம்
ஆழம் அறியாமல் அலைக்கழிந்து
மேலே நுணிப்புல் மேய்ந்து
தானே உணராமல் தறிகெட்டு
வேறிடம் நோக்கி இடம்பெயர்ந்தால்
இல்லை என்றால் எங்குமில்லை
மதங்களை மனிதன் படைத்தானா
மதமாய் மனிதன் ஜனித்தானா
பார்த்து பரவசத்தில் தனதாக்க
வாணிகப் பொருளா மதம்
விளம்பரம் செய்து வீடுபெற
விளையாட்டு பொருளா மதம்
ஒருவர் நிலை தாழ்ந்து பரிதவிக்க
உதவிக் கரம் நீடடி உதவுங்கள்
உதவாத மதம்தான் தீர்வு என
கொம்பு சீவி கூர் பாய்ச்சாதீர்
மீளா துயர் வறுமை தீர
மனதிற்கு ஆறுதல் உதவியே தவிர
மதமாற்றம் தீர்வு அல்ல மாறாய்
மனதை எமாற்ற மயக்கும் வித்தை
தன் மதம் தன்னை அறியாதான்
புகுந்த மதம் எவ்வாறு அறிவான்
தாய் பால் குடித்து வளர்ந்தபின்
டப்பா பாலே சிறந்தது என்பானோ?
முமு