எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுதந்திரம் கங்கையில் காவிரி இணையும்போது என்கவிதை பாடும் சுதந்திரம்...

சுதந்திரம்

கங்கையில் காவிரி இணையும்போது
என்கவிதை பாடும் சுதந்திரம்
சாமானியனுக்கு அரசு அலுவலகங்கள்
சாமரம் வீசும்போது
என்கவிதை பாடும் சுதந்திரம்
காவல் நிலையங்கள்
கசாப்பு நிலையங்கள்
ஆகாத பொழுதில்
என்கவிதை பாடும் சுதந்திரம்
மேல்சாதி கீழ்சாதி
இல்லாமல் அறிவுக்கு
சலுகை கொடுக்கும்போது
என்கவிதை பாடும் சுதந்திரம்
தீட்டு தம்ளர் இல்லாத
தேநீர் கடை வரும்போது
என்கவிதை பாடும் சுதந்திரம்
அணைகளும் குளங்களும் -ஒரே
அரசுக்குச் சொந்தம்
என்கின்ற பொழுதில்
என்கவிதை பாடும் சுதந்திரம்.
இப்படியே அவலங்கள்
இந்நாட்டில் ஆயிரம்
அழிகின்ற பொழுது
என்கவிதை பாடும் சுதந்திரம்
இதையெல்லாம் செய்யாமல்
எனக்கு வேலைதராமல்
செவ்வாயுக்கு ராக்கெட் அனுப்பி
என்ன பயன் வரும்.
எப்படி என்கவிதை பாடும்
பாடாது பாடாது என்கவிதை
பட்டினிக்கு பட்டினி கொடுக்கும்வரை
தேறாது தேறாது சுதந்திரம்
தெருவோர பிச்சைகள் தீரும்வரை.

சுசீந்திரன்.

நாள் : 14-Aug-14, 8:47 pm

மேலே