எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கெங்கும் பாதைகள், எண்ணற்ற செயல்முறைகள், கைநிறைய தலைசுற்ற வரங்கள்,...

எங்கெங்கும் பாதைகள்,
எண்ணற்ற செயல்முறைகள்,
கைநிறைய தலைசுற்ற வரங்கள்,
வரம் நிறையா மனக்கதிகள்,
பேச முடியா விளக்கங்கள்,
மூச்சில் மோதும் மனிதர்கள்,
ஆயிரமாயிரம்
குழப்பங்களோடும் தெளிவுகளோடும்
சொற்ப கேள்விகளோடும்
பாவமாய் நின்று சற்று மேலே பார்க்கிறேன்,
அப்படியே நகர்ந்தும்,நகராமலும் வானம்,
அப்படியே நடந்தும்,கடந்தும் நானும்...................

பதிவு : சர் நா
நாள் : 16-Aug-14, 8:13 pm

மேலே