அண்ணாச்சி எழுதிக்கோங்க " எனச்சொல்லி... மாத சம்பளக்காரன் மளிகை...
அண்ணாச்சி எழுதிக்கோங்க "
எனச்சொல்லி...
மாத சம்பளக்காரன்
மளிகை வாங்கும்
கடைகளும்
இப்போதில்லை.!
வங்கி அட்டைதான்
இருக்கிறதே என
வாங்கிவந்து பார்த்தால்!
அவன் அனுப்பும்
கணக்குகளில்
அண்ணாச்சியின்
சுத்தமுமில்லை.!!
'இவர்கள் நாசமாய்
போகட்டும்'
ஆனால் எனக்குத்
தெரிய வேண்டியது?
உலக அரசியல் துவங்கி
உள்ளூர் சினிமா வரை..
பரிமாறியபடி
பொருட்கள் கொடுத்த,
அந்த அண்ணாச்சிகள்...
எங்கே போனார்கள் ?
'அவர்கள் நன்றாய்
இருக்கட்டும்'........
பி.கு - நேற்று என் தங்கை இதை பகிர்ந்தாள். இன்று நானே படத்துடன் .