எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதுவரை என்னுடன் பயணித்தவள் அவளுக்கான இடத்தில் இறங்கிவிட்டாள். நான்...

இதுவரை என்னுடன்
பயணித்தவள்
அவளுக்கான இடத்தில்
இறங்கிவிட்டாள்.

நான் எழுதிய கவிதையை
யாரோ பிடுங்கிச்சென்ற
ஏமாற்றவலி...!

சற்று நொடியில்
சட்டென்று திரும்பி
ஒரு புன்னகை பூத்து
கைவிரல் விரித்து
டாட்டா காட்டிய
அவளின் விழியில்
எழுந்த காதல் மின்னல்
எழுதியது என்னுள்
ஆயிரமாயிரம் கவிதைகள்.
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அவளுக்காக
மற்றுமொரு விழியதிகாரம்.

-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 31-Aug-14, 7:33 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே