எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

----- பரந்த மனப்பான்மை ---- கல்யாணம் முடிந்து ஒரு...

----- பரந்த மனப்பான்மை ----

கல்யாணம் முடிந்து
ஒரு நாள் இரவில்...

என்னிடம்
தன் காதல்களை
காமங்களை
எச்சில்களை,
பெருமைப்பட
அடுக்கிக் கொண்டிருந்தார்
அவர் ...
இனிமேல் என்ன அவர்?
அவன்.!
ச்சீ அது !!

அடுக்குகளின் இடையில்
அது என்னை
பார்த்து கேட்டது !
"நீ யாரயும்
லவ் பண்ணியிருக்கியா?"

'ஒரு பையன்
என்ன சுத்தி சுத்தி
வந்தான்"
உண்மையை
சொன்னவுடன்
முகம் மாறியது .!

'ஆனா எனக்கு
அவன பிடிக்காது '
பொய் சொல்லி
பா(வி)வம் அதை
தூங்க வைத்தேன்.!!











நாள் : 31-Aug-14, 7:34 pm

மேலே