--- மூன்று நூறுகள் --- இது என் நூறாவது...
--- மூன்று நூறுகள் ---
இது என் நூறாவது எண்ணம் ( சில படைப்புகள் கூட இங்கேயே போட்டுவிட்டேன் )
கொஞ்ச நாட்கள் முன்புதான் நூறாவது படைப்பும் நடந்தது .
இன்று ஒரு மரபுக்கவி என் சிறந்த தோழியாக இருக்கும் என் மனைவிக்காக எழுதினேன் .மதியம் ஒரு மணிக்கு படைத்தேன் .
ஒரு வாடிக்கையாளர் காக்க வைத்துவிட்டார் ஒரு மணி நேரம் .
அப்போது அலைபேசி எடுத்து எழுதி அதிலிருந்தே படைத்து விட்டேன் .
அந்த கவிதை படைத்த 8 மணி நேரத்தில் 100 நட்சத்திரங்களை கொண்டு வந்திருக்கிறது .
மரபின் மகத்துவம் புரிகிறது .
( எனினும் சில கவிதைகளை புதுக்கவிதை வடிவில்தான் படைத்தால்தான் நன்றாக இருக்கும் என்பதும் என் கருத்து )
அனைவருக்கும் நன்றிகள் .
தளத்தாருக்கும் சிறப்பு நன்றிகள் .
நானும் என் மனைவியும் ஒரு போராட்டத்தின் விளைவாக 15 வருடம் முன்பு இங்கு வந்தோம் . வசந்தன் பிறந்த குழந்தை அப்போது . இன்று அவர் 10 வகுப்பில் .
பிறகு உதயன் இங்கேயே பிறந்து , ஆறாம் வகுப்பில் இருக்கிறார் .
நல்லதொரு நிலையில் வாழ்வு வந்துவிட்டது , அதன் முதல் காரணம் .என் கடைசி தோழி , அவளே என் மனைவி .
வருடங்கள் ஓடிவிட்டது .
வயதாகி விட்டது .
இருப்பினும் எங்கள் வீட்டில் நால்வரும் பிள்ளைகளே எங்களையும் சேர்த்து .பெரியவர் யாருமில்லை .நால்வரும் பக்கா வாலான குழந்தைகளே .
பெரிய கேள்விக்குறி முன்னே இருந்த போது கூட சிரித்துக் கொண்டுதான் வந்தோம் .
அந்த சிரிப்பை பகிர்கிறேன் .
இது நாங்கள் hyderabad வந்த அன்று குழப்பத்தில் எடுத்த படம் .
குழப்பத்திலேயே இப்படி இருக்கோம்னா ?
நல்லா இருந்தா எப்படி இருப்போம் ,
வாருங்கள் வீட்டுக்கு . காட்டுகிறோம.
ஹ்ஹஹ.
பாசங்களுடன் / ராம் , லதா , வசந்தன் , உதயன் .
இதை திருத்தி பதிக்கிறேன் .
மிக மகிழ்ச்சியோடு .
என் தம்பி இஸ்மாயில் வந்துட்டார்.
இதை அவர் பகிர்ந்த செய்தி இரண்டு நொடி முன்பு வந்தது .
இதை விட என்ன வேண்டும் எனக்கு ?
He is Back .ஒரு பகிர்வில் இன்னுமொரு நாறு நடசத்திரம். அசலம் அலேகும் பாய் .